ரிலீசுக்கு தயாரான இளைய திலகம் பிரபுவின் ராஜபுத்திரன்!

இளைய திலகம் பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன். கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி
மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாச போராட்டத்தை உணர்வு பூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாக பதிவு செய்து இருக்கிறார் படத்தின் இயக்குனர் மகா கந்தன்.

பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார், டி. ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார். ஏஐஸ் நௌஃபல் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங் ஸ்டன், தங்கதுரை, இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே .எம் .சஃபி தயாரித்துள்ளார்

படத்தைப் பற்றி இயக்குனர் மகாகந்தன் கூறும்போது, “ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். அனைவரும் விரும்பக் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைவருக்கும் பிடித்த படமாக ராஜபுத்திரன் நிச்சயம் இருக்கும். படம் ஏப்ரலில் திரைக்கு வர இருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *