ஓ மை கடவுளே என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் “ட்ராகன்”. லவ் டுடே என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு பிரதீப்பின் இந்த படத்தின் ரிசல்ட்டை தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ட்ராகன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
காலை 9 மணி காட்சிக்கே தமிழ்நாடு முழுக்க ஹவுஸ்புல் காட்சிகள். படத்தை பார்த்த ரசிகர்கள் லவ் டுடே போலவே இந்த படமும் முழுக்க முழுக்க ரசிக்கும்படியான ஒரு நல்ல எண்டர்டெயினராக வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என்றும் கூறுகின்றனர்.
லவ்டுடே படம் ஓபனிங்கிலேயே நல்ல வசூலை கொடுத்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 64 கோடி ரூபாய் வசூல் செய்தது. உலகம் முழுக்க 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து வெளியாகும் இந்த படத்தின் ஓபனிங்கே அனைவரையும் மிரள வைத்துள்ளது.
ட்ராகன் முதல் நாள் தமிழ்நாடு வசூல் 4 அல்லது 5 கோடிக்கு மேல் வரும் என்கிறார்கள்.
இது Tier 2 ஹீரோக்களின் முதல் நாள் வசூல். தற்போது நல்ல ரிப்போர்ட் வந்து கொண்டிருப்பதால் மொத்த வசூலிலும் லவ் டுடேவையு. மிஞ்சி இன்னொரு 100 கோடி படமாக அனையும் என்கிறார்கள் திரையுலகத்தினர். அறிமுக நடிகராக இருந்த் தற்போது ஸ்டாராக மாறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். வாழ்த்துக்கள்.