தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தற்போது அஜய் ஞானமுத்துவின் டிமாண்டி காலனி படத்தையும், வைபவ் நடிக்க சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் என்ற படத்தை வெளியீட்டுக்கு தயாராக வைத்துள்ளது. இந்நிலையில் தங்களது மூன்றாவது படத்தை அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்க, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் துவக்கியுள்ளது. BTG Universal நிறுவன தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரெட்ட தல என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா? ஆம், நடிகர் அஜித் நடிப்பில் தீனா படத்தை வெற்றிப் படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித் உடன் இணைந்து இதே ரெட்ட தல என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்க இருந்தார். அதற்கான போட்டோஷூட் எல்லாம் முடிந்து, சில புகைப்படங்கள் வெளியானது. பின்னர் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து அஜித் விலக, அந்த கதையை வேறு பெயரில் அதாவது கஜினி என்ற பெயரில் சூர்யாவை ஹீரோவாக வெற்றி கண்டார் முருகதாஸ்.
தற்போது குரு பயன்படுத்தாமல் விட்ட மிகச்சிறப்பான அந்த தலைப்பை அவரது சிஷ்யர் கிரிஷ் திருக்குமரன் அருண் விஜய்யை வைத்து இயக்கும் படத்துக்கு தலைப்பாக்கி விட்டார்.