‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ இந்தி பதிப்பிற்கு குரல் கொடுத்த அஜய் தேவ்கன்!

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா தயாரிப்பில், முதன்முறையாக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜய் தேவ்கனும், அவரது மகன் யுக் தேவ்கனும் இணைந்து, ஒரு முக்கிய ஹாலிவுட் படத் தொடரான ‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ இந்தி பதிப்பிற்கு குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2025 மே 30 அன்று இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

ஜாக்கி சான் நடித்த திரு. ஹான் கதாபாத்திரத்திற்கு அஜய் தேவ்கன் குரல் கொடுக்கிறார். முன்னணி கதாநாயகனான லி ஃபாங் கதாபாத்திரத்திற்கு யுக் தேவ்கன் தனது குரலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இது, அஜய் தேவ்கனின் சர்வதேச திரைப்படத்தின் முதல் குரல் ஒளிப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. யுக், இளம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறக்கூடிய அளவிற்கு, அழுத்தமான மற்றும் ஈர்க்கக்கூடிய ஆளுமையுடன் குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த நிஜமான தந்தை-மகன் உறவு, படத்தில் ஆசானும் சீடனும் ஆகிய உறவின் உணர்ச்சிமிக்க பகுதியை மேலும் வலுப்படுத்துகிறது. யுக், இந்த திரைப்படத் தொடரின் மீது கொண்டுள்ள ஆர்வம் மற்றும் திறமையான குரலால், ‘கராத்தே கிட்’ பாரம்பரியத்தை, இந்திய பார்வையாளர்களின் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் சிறந்த தேர்வாக உள்ளார்.

நியூயார்க் நகரை கதைக்களமாக அமைத்துள்ள இந்தப் படம், புதிய பள்ளியில் பல தடைகளை சந்திக்கும் லி ஃபாங் என்ற குங்க் ஃபூ மாணவனின் பயணத்தை சொல்கிறது. அங்கு, அவன் ஒரு உள்ளூர் கராத்தே வீரருடன் மோத வேண்டிய சூழ்நிலையில் சிக்குகிறான். ஆசான் திரு. ஹானும், டேனியல் லாருசோவின் வழிகாட்டுதலும், லி ஃபாங் வாழ்க்கையை மாற்றுகிறது. அவன் வளர்ச்சி க்காக எத்தகைய பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதே கரு.

அஜய் மற்றும் யுக் ஆகியோர் இப்படத்தில் இணைவது, குடும்பத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டாடும் ஒரு அற்புதமான அம்சமாகும். இது, பழைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் இடையிலான பாலமாகவும் செயல்படுகிறது.

‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ திரைப்படம், சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா மூலம் மே 30, 2025 அன்று இந்தியாவின் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *