இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன் சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. PGP. ENTERPRISES சார்பில் P.G.பிச்சைமணி தென்னிந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.