இயக்குனர் சுசீந்திரன் எந்த ஜானரை கையில் எடுத்தாலும் அதில் அவரது முழு உழைப்பையும் கொட்டி அதை அந்தந்த ஜானர் ரசிகரகளும், மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்து விடுவார். ஏற்கனவே காதல் படமாக ஆதலால் காதல் செய்வீர் படத்தை எடுத்து அதை இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான காதல் கதையாகவும் கொடுத்திருந்தார். அந்த வகையில் தற்போது 2கே தலைமுறையில் காதல் எப்படி இருக்கிறது என்பதை பேசும் படமாக இளமை ததும்பும் படமாகக் கொடுக்கும் ஒரு முயற்சி தான் “2k லவ் ஸ்டோரி”.
படத்தின் கதைப்படி, சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள் ஜெகவீர் மற்றும் மீனாட்சி. ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஷூட் நிறுவனம் ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து நடத்த, அத்துடன் சோஷியல் மீடியாவில் vibe with mk என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு நிறைய ரசிகர்களை வைத்திருக்கிறார்கள். ஒரு பையனும் பெண்ணும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியுமா என்ற கேள்வியை உடைத்து நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாழ்வில் இன்னொரு பெண்ணோ, பையனோ வந்தால் அவர்களுக்குள் இருக்கும் காதல் வெளியில் வரும் என சொல்கிறார்கள் சிலர். அந்த நேரத்தில் கல்லூரியில் ஜூனியரான பவித்ரா என்ற பெண் நாயகன் ஜெகவீரை காதலிக்க துவங்க, இருவரும் காதலிக்கிறார்கள். அந்த காதல் என்ன ஆனது? மீனாட்சியின் மனநிலை என்ன? உண்மையில் இருவரும் நண்பர்களாகவே இருந்தார்களா? இல்லை காதலர்களாக மாறி கரம் பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஜெகவீர் முடிந்தவரை நல்ல நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார். முதல் படம் என்பதால் சில சில குறைகளை தவிர்க்கலாம். மற்றபடி அடுத்தடுத்த படங்களில் அவர் இன்னும் மெறுகேற வாய்ப்புள்ளது. நாயகி மீனாட்சி கோவிந்தராஜன். நல்ல அழகான தமிழ்ப்பெண். ஆளுமையான ஒரு கதாபாத்திரத்தில் அதே நேரம் எமோஷனலான ஒரு கதாபாத்திரம். நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் அவரது கேரியரில் சொல்லிக் கொள்ளும்படியான இன்னொரு படம்.
பல இளைஞர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். குறை சொல்லும் அளவுக்கு இல்லாத ஒரு நடிப்பு தான். அவர்களை கரையேற்றி செல்ல அனுபவ நடிகர்கள் ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், வினோதினி என பல நடிகர்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர். அதிலும் இரண்டால் பாதியில் சிங்கம் புலி, பால சரவணன் காமெடி காட்சிகள் செம ரகளை.
டி. இமானின் இசையில் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. படத்தின் அறிமுக பாடல், கிளைமாக்ஸ் பாடல் என எல்லாமே படமாக்கப்பட்ட விதமும் ரசிக்கும்படி இருந்தது. பின்னணி இசையும் ஓகே ரகம்.
அந்தந்த காலத்து இளைஞர்களை கவரும் வகையில் படங்களை எடுக்க வேண்டும் என முயற்சிக்கும் சுசீந்திரன், இந்த படத்திலும் முழுக்க இளைஞர்களை வைத்து நல்ல ரசிக்கும்படியான படத்தை தந்துள்ளார். நல்ல மனதை வருடும் படமாகவும் சில இடங்களில் இருக்கிறது. இரண்டாம் பாதியில் ரகளையான காமெடியாகவும் இருக்கிறது. ஆதலால் காதல் செய்வீர் படத்தை போலவே இந்த படத்திலும் எதிர்பாராத விஷயங்கள் ஆங்காங்கே வந்து நம்மை சர்ப்ரைஸ் செய்து கொண்டு இருக்கிறது. காதலர் தினத்துக்கு வந்திருக்கும் நல்ல ஒரு ஆண், பெண் உறவை பேசும் படமாக அமைந்துள்ளது இந்த 2கே லவ் ஸ்டோரி.