பட்ஜெட் பற்றி தயக்கம் இன்றி செலவு செய்தார் விஜய் ஆண்டனி – இயக்குனர் லியோ ஜான் பால்!

தமிழ் சினிமா துறையின் மிகச் சிறந்த மற்றும் பாராட்டப்பட்ட எடிட்டர்களில் ஒருவர் லியோ ஜான் பால், தனது இயக்குநர் அவதாரமாக ‘மார்கன்’ திரைப்படத்தை இயகியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. எடிட்டிங் துறையில் ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் ட்ரான்ஸிஷன்களில் தேர்ச்சி பெற்றவர், இப்போது இயக்குநராக தாழ்மையுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ப்ரொமோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குநர் லியோ ஜான் பால், ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “இந்தப் படத்தின் கதை எழுத தொடங்கியபோது, சினிமாவை அனுபவத்தை திரையரங்கில் முழுமையாக அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆரம்பித்தோம். மார்டர் மிஸ்டரி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் சூப்பர்நேச்சுரல் விஷயங்கள் இணைத்திருப்பதால், ஒரு புதிய, முற்றிலும் வேறுபட்ட ஆடியோ-விஸ்வல் அனுபவத்தை தர முயற்சி செய்திருக்கிறோம்”.

“மிகவும் நம்பிக்கையளிக்கும் நடிகர்கள் இணைந்ததால், எனது கதை திரையில் அழகாக உயிர் பெற்று வந்தது. விஜய் ஆண்டனி அவர்கள், கதையை நம்பி, தனது தேர்ச்சியான நடிப்பால் படத்தை மேலும் உயர்த்தினார். இப்படத்திற்கு தரமான தயாரிப்பு தேவைப்பட்டது, அதை முழு அளவில் புரிந்துகொண்டு, அவர் பட்ஜெட்டில் எந்த தயக்கமும் இன்றி பல வசதிகளை வழங்கினார்.

அஜய் திஷான் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக நீருக்கு அடியில் படமாக்கபட்ட காட்சிகளில், அவர் எதிர்கொண்ட உடல் மற்றும் மன அழுத்தம் பெரிதாக இருந்தும், அதை மிகுந்த முயற்சியுடன் கையாண்டார். பிரிகிடா, 7 கிலோ வரை எடை குறைத்து, தன்னிச்சையான நெகிழ்வை வெளிக்கொண்டு வந்துள்ளார்.”

“மார்கன் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி, உணர்ச்சிபூர்வமான, முழுமையான சினிமா அனுபவத்தை வழங்கும், குறிப்பாக விஜய் ஆண்டனியின் அபூர்வமான பின்னணி இசை படத்தை வேறு தரத்தில் உயர்த்தும்.”

மார்கன் திரைப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்ஸ் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்கியுள்ளார். விஜய் ஆண்டனி, அஜய் திஷான் மற்றும் பிரிகிடா தவிர, இப்படத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *